Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பேரனோடு இருந்த பெண்…. வீட்டில் திடீர் தீ விபத்து…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் மெயின் ரோடு பகுதியில் செல்லதுரை-பூமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று மாலை வீட்டில் பூமணியும், அவரது பேரன் விக்ரமும் இருந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் மேல் பகுதியில் உள்ள மின் வயரில் இருந்து தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த பூமணி தனது பேரனை தூக்கிக்கொண்டு வெளியே ஓடி வந்தார். சிறிது நேரத்தில் வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிகழ்வுகள் நீண்ட நேரம் போராடி வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் தீ விபத்தில் வீட்டில் இருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள், கட்டில் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |