Categories
தேசிய செய்திகள்

பேரறிஞர் அண்ணாவை தரக்குறைவாக பேசிய பத்ரி சேஷாத்ரி…. ஒரே இரவில் நடந்த திருப்பம்…. அதிரடி நடவடிக்கை….!!!!

கிழக்கு பதிப்பகம் எனும் பதிப்பகத்தின் வாயிலாக பல்வேறு புத்தகங்களை வெளியிடுபவர்தான் பத்ரி சேஷாத்ரி. மேலும் இவர் பல்வேறு விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பவர் ஆவார். வலது சாரி சிந்தனையுடையவர் எனும் பார்வை இவர் மீது உண்டு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் தமிழ்நாடு இணையகல்வி கழக ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றார். அப்போதே பல பேரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இச்சூழலில் பி.எஸ்.நிசிம் என்பவர் “பிரம்மாஸ்திரா” என்ற இந்தி திரைப்படத்தை மேற்கோள் காட்டி மாயாஜாலம் மற்றும் அறிவியல் சம்பந்தப்பட்டவைகளுக்கு இந்தியில் சரியான சொற்கள் இல்லை என டுவிட்டரில் கூறியிருந்தார். இதை ரீ டுவிட் செய்திருக்கும் வினோத்குமார் என்ற பத்திரிகையாளர், அதனால்தான் நம் முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை, 3 மாதங்களில் இந்திமொழியைக் கற்கலாம் என்றும் அதற்குப் பின் அந்த மொழியிலிருந்து கற்க ஒன்றும் இல்லை என்றும் கூறினார் என குறிப்பிட்டிருந்தார்.

இதை பார்த்த பத்ரி அதனை ரீ டுவிட் செய்ததாவது, “என்ன ஒரு அபத்தமான கூற்று. சி.என்.அண்ணாதுரை இக்கருத்தை கூறியிருந்தால், அவரையும் முட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்” என பதிவிட்டிருந்தார். அவருடைய இந்த டுவிட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின் தி.மு.க எம்.பி.செந்தில்குமார் தன் டுவிட்டர் பக்கத்தில், பேரறிஞர் அண்ணாவை பத்ரி அவமானப்படுத்தி பேசியது கண்டனத்துக்குரியது ஆகும். இத்தகைய ஆட்களுக்கு குழுக்களில் (தமிழ்நாடு இணைய கல்வி ஆலோசனை குழு) இடமளிப்பது அண்ணா மேல் மரியாதை வைத்திருக்கும் கழக சுய மரியாதை தொண்டர்களுக்கு வேதனையளிக்கிறது என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று செந்தில் குமார் தன் டுவிட்டர் பக்கத்தில் “கழக தொண்டர்களுக்கு ஓர் நற்செய்தி. அதாவது தமிழ் இணையக்கல்விக் கழக ஆலோசனைக் குழுவிலிருந்து பத்ரி நீக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்து அதற்கான நகலையும் பகிர்ந்திருந்தார்.

Categories

Tech |