ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்த உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. கடந்த சில வாரங்களாக இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி விசாரணை முடிவு பெற்றது. இதுவரை நடைபெற்ற விசாரணையில் பேரறிவாளனுக்கு சாதகமாகவும், இதில் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்திய ஆளுநருக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை உச்ச நீதிமன்றம் முன் வைத்த நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் அவர் விடுதலையானதை தொடர்ந்து அவரது தாய் அற்புதம்மாள் பேரறிவாளனுக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். 31 ஆண்டு காலம் சிறையில் வாழ்க்கையை கழித்து பெரும் வலியை என் மகன் கடந்து விட்டான். இந்த தருணத்தில் பேரறிவாளனின் விடுதலைக்காக குரல் கொடுத்து ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. இந்த தருணத்தில் முதல்வர் முக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் பதிவிட்டிருந்தார்.