முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் புழல் சிறையில் இருக்கின்றனர். இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே சிறையில் இருக்கும் தனது மகனான பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார்.
இதையடுத்து அற்புதம்மாளின் வேண்டுகோளை உரிய பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின், அவருக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து உத்தரவிட்டார். இந்நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி இன்று ட்விட்டரில் இன்று பலரும் ஆதரவு திரட்டி வருகின்றனர். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். அதில் சட்டம் தடுக்கவில்லை எனக்கூறிய அவர், அரசியல் காரணங்களுக்காக பேரறிவாளனை விடுதலை செய்யாமல் இருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.