Categories
தேசிய செய்திகள்

பேரறிவாளனுக்கு 8-வது முறையாக பரோல் நீட்டிப்பு…. தமிழக அரசு உத்தரவு….!!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர் பேரறிவாளன். இவர் சுமார் 30 ஆண்டு காலமாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இவருக்கு சிறுநீரகத் தொற்று, வயிறு சம்பந்தமான பாதிப்புகள் போன்றவை உள்ளது. இதன் காரணமாக பேரறிவாளனுக்கு பரோல் வழங்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த மே மாதம் தமிழக முதல்வருக்கு ஒரு மனு அனுப்பினார். அந்த மனுவை பரிசீலனை செய்த முதல்வர், 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின் பேரில், கடந்த மே மாதம் 28-ஆம் தேதி பரோலில் ஜோலார்பேட்டையில் அவருடைய வீட்டுக்கு பேரறிவாளன் வந்தார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி, மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கையின் பெயரில் அவருக்கு 7 முறை தமிழக அரசு பரோல் வழங்கியது. இந்நிலையில் பேரறிவாளனின் பரோல் வரும் 24-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், பேரறிவாளனுக்கு 8-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |