Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

பேரறிவாளன் தாயார் மனு… அதிரடி காட்டிய நீதிமன்றம்…. தமிழக அரசுக்கு உத்தரவு….!!

தமிழக ஆளுநரின் கடித்தின் நகல் கோரி பேரறிவாளன் தயார் அற்புதம்மாள் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் பல ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய பரிந்துரைத்து ஆளுநர் திரு பன்வாரிலால் புரோகித்துக்கு தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது.

இந்த விவகாரத்தில் பன்னோக்கு விசாரணை ஆணையத்தின் அறிக்கை கிடைக்கும் வரை முடிவெடுக்க முடியாது என ஆளுநர் புரோகித் கடிதம் அனுப்பினார். இந்நிலையில் ஆளுநர் கடிதத்தின் நகல் கோரி பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |