Categories
மாநில செய்திகள்

பேரறிவாளன் விடுதலை…. “அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி”…. இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டறிக்கை….!!!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்த உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. கடந்த சில வாரங்களாக இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி விசாரணை முடிவு பெற்றது. இதுவரை நடைபெற்ற விசாரணையில் பேரறிவாளனுக்கு சாதகமாகவும், இதில் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்திய ஆளுநருக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை உச்ச நீதிமன்றம் முன் வைத்த நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் பேரறிவாளன் விடுதலை அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி என ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்,மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநில அமைச்சரவையில் தீர்மானத்தின்படி பேரறிவாளனையும் அவரோடு இந்த வழக்கில் சம்பந்தப் பட்டிருக்கும் மற்ற ஆறு பெயர்களையும் எனது தலைமையிலான அரசு விடுதலை செய்யும் என 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்ததை நன்றியோடு நினைவு கூறுகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |