Categories
மாநில செய்திகள்

பேரறிவாளன் விடுதலை….. “வாயில் வெள்ளை துணியை கட்டி”…. காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்….!!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது. இவர் விடுதலையானதை தொடர்ந்து பல கட்சியை சேர்ந்தவர்கள் வரவேற்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். முதல்வர் முக ஸ்டாலின் வரலாற்றில் நினைவு கூறத்தக்க தீர்ப்பு இது என்று கூறினார். அது மட்டும் இல்லாமல் அவரை நேரில் அழைத்து பேசினார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் மட்டும் இவரின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இன்று பல இடங்களில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் மதுரையில் காங்கிரஸ் கட்சியினர் தமுக்கம் மைதானம் நேரு சிலை முன்பாக வாயில் வெள்ளை துணி கட்டி எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |