கடந்த ஆட்சியில் திட்டங்கள் முடக்கப்பட்டதாக கூறி பேசுவதற்கு பேரவையில் அனுமதி மறுப்பதாக குற்றஞ்சாட்டி அதிமுகவினர் வெளிநடப்பு செய்து இருக்கிறார்கள்.
வருகின்ற 13ஆம் தேதி சட்டப்பேரவை நிகழ்வுகள் முடிவடைகின்றன.. இன்று காலை, மாலை என இருவேளைகளில் சட்டப்பேரவை நடைபெறுகிறது.. சட்டமன்றத்தில் இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன், ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத் துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கேபி முனுசாமி நேரமில்லா நேரத்தில் பேச முற்பட்டனர்.. ஆனால் சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார்.. இதனையடுத்து கடந்த ஆட்சி காலத்தில் செயல்படுத்திய திட்டங்கள் முடக்கப்பட்டதாக கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்..