தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் பட்டியலில் பிஎச்டி படம் போலியானது அல்ல என்பதற்கான சான்றிதழை மார்ச் 16-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து தனியார் கல்லூரி நிர்வாகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள படிவத்தில் பேராசிரியர்கள் சிலர் போலி பிஹெச்டி சான்றிதழை கொடுத்தும் மேலும் சிலர் தவறான ஆதார், பேன் போன்ற போலி ஆவணங்களை அழித்தும் பணியில் சேர்ந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களின் விவரங்கள் சான்றிதழ்களை முழுமையாக பரிசோதித்த பின்னரே பணியில் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தற்போது பணியாற்றும் பேராசிரியர்களில் பிஎச்டி பட்டம் உண்மையானது என்பதற்கான சான்றிதழை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தில் இடம் பெற்று வரும் மார்ச் 16-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.