கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையில் பாதிப்பு சற்று குறைந்து வருவதால் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போட்ட மாணவர்கள் தான் கல்லூரிகளில் அனுமதிக்கப்படுவர் என்று அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் சென்னையில் 112 கல்லூரியில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுவதால் தடுப்பூசி போடாத மாணவர்கள் பேராசிரியர்கள் கல்லூரிக்கு ஆதார் அட்டையுடன் வர வேண்டும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.சென்னையில் இதுவரை 38 லட்சத்து 72 ஆயிரத்து 322 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.