சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர் ஒருவர் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மாணவி கையை அறுத்துக் கொண்டார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு முடிவே இல்லாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் பெண்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை.
இந்நிலையில் சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர் ஒருவர் மாணவியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். அதனால் மாணவி கையை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்தார். இதனையடுத்து அந்தப் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 5-வது நாளாக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழக நிர்வாகம் பேராசிரியரை காப்பாற்ற நினைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.