Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பேரிச்சம்பழம் கொடுத்த ஊழியர்…. திடீரென தாக்கிய கோவில் யானை…. மதுரையில் பரபரப்பு…!!

முருகன் கோவிலின் ஊழியரை யானை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 22-ஆம் தேதி எண்ணெய்க்காப்பு திருவிழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் தினமும் இரவில் தெய்வானை அம்மாள் திருவாச்சி மண்டபத்தை சுற்றி வலம் வருவது வழக்கம். அதைப்போல் நேற்றும் தெய்வானை அம்மாள்  இரவில் வலம் வந்தபோது அவர் பின்னால் வந்த யானைக்கு கோவில் ஊழியரான புகழேந்தி என்பவர்  பேரிச்சம்பழம் கொடுத்துள்ளார். அப்போது திடீரென யானை புகழேந்தியை  தாக்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து அலறியடித்து  ஓடினர்.

இதனைப் பார்த்த பாகன் யானையை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து இருப்பிடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இதில் படுகாயம் அடைந்த புகழேந்தியை  அருகில்  இருந்தவர்கள் மீட்டு  தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் . மேலும் 7 வயதில் முருகன் கோவிலுக்கு வந்த  இந்த  யானை பாகன்களான  கணபதி, நகசுந்தரம், காளீஸ்வரன் மற்றும்  கரன் ஆகியோரையும்  தாக்கியது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |