பேரிச்சம்பழத்தை அதிக அளவு சாப்பிட்டால் உடலில் பல்வேறு ஆபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
பேரிச்சம் பழத்தில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் இதனை சாப்பிட்டு வந்தால் ஒருவருக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் உள்ளது. ஆனால் அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பல விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். அவ்வாறு பேரிச்சம்பழம் அதிகமாக சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்.
பேரிச்சம்பழத்தை உலர வைக்கும் போது அதில் பாக்டீரியாக்கள் சேராமல் இருப்பதற்காக சேர்க்கப்படும் ரசாயனக் கலவைகளில் சல்ஃபைடும் உள்ளது. அதனால் வயிற்று வலி, வயிறு வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதிக அளவில் பேரிச்சம் பழம் எடுத்துக்கொள்வது மலச்சிக்கல் மற்றும் வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமாவை உண்டாக வாய்ப்புள்ளது. பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. கலோரிகளும் நிரப்பப்பட்டுள்ளது.
அதனால் உடல் எடை அதிகரிக்கும். சரும வெடிப்புகள் மற்றும் தடிப்புகள் ஏற்படும். சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த அளவில் சர்க்கரை அளவு பாதிப்பை ஏற்படுத்தும். ஜீரணைப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே பேரிச்சம்பழத்தை அதிகளவு சாப்பிடுவதை தவிர்ப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.