தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. அதுமட்டுமல்லாமல் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பேரிடர் காலத்தில் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை கால பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதி,கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தயார் நிலையில் உள்ளோம். பாதிப்புகள் குறித்து தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு அறை 101, 112, பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு 1070, 9445869843 ஆகிய எண்களில் மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.