Categories
மாநில செய்திகள்

பேரிடர் தொடர்பான தகவல்களை…. இந்த எண்ணுக்கு தெரிவிக்கலாம் – அமைச்சர் அறிவிப்பு…!!!

கனமழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நேரடியாக சென்று பார்வையிட்டு மக்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறது. இந்நிலையில் பேரிடர் காலங்களில் ஏற்படும் தகவல்களை 9445869848 என்ற வாட்ஸ் அப் எண்ணில் அரசுக்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கனமழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர்கள் குறித்த எச்சரிக்கை தகவல்கள் TNSMART என்ற செயலி மூலமும், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார் .

Categories

Tech |