தென் ஆப்பிரிக்க நாட்டில் 2 மாதத்தில் 350 யானைகள் உயிரிழந்துள்ளன.
சமீபகாலமாக விலங்குகளுக்கு எதிரான செயல்கள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தியாவைப் பொறுத்தவரையில் கேரள மாநிலத்தில் யானை ஒன்று வெடிவைத்து கொல்லப்பட்டது. அதேபோல் பசுமாடுகளின் சிலவற்றின் வாயில் வெடி வைக்கப்பட்டன. அதேபோல், சமீபத்தில் தண்ணீர் குடிக்க வந்த குரங்கு ஒன்று தூக்கிலிடப்பட்ட கொலை செய்யப்பட்டது.
இப்படி மனிதர்களால் விலங்கிற்கு தொடர்ந்து இந்தியாவில் ஓரிரு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகையில், தென் ஆப்பிரிக்க நாடான போர்ட்ஸ்வானாவில் என்னும் பகுதியில் 2 மாதத்தில் 350க்கும் மேற்பட்ட யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். யானைகளின் உயிரிழப்பு குறித்து அப்பகுதி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விலங்குகளை வேட்டையாட மனிதர்களால் வைக்கப்பட்ட நஞ்சை உண்டு யானைகள் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யானைகள் இறந்த இந்த சம்பவத்தை அந்நாட்டு அரசு மிகப்பெரிய பேரிழப்பு என்று குறிப்பிட்டுள்ளது.