Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேருந்தின் கண்ணாடி உடைப்பு…. வாலிபரை கைது செய்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

பேருந்து மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து மணக்குடி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை பாபு என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தெங்கம்புதூர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் இறங்கி கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் பேருந்தின் பின்பக்க கண்ணாடி மீது கற்களை வீசியுள்ளார். இதனால் கண்ணாடி உடைந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பேருந்தில் மீது கல் வீசிய நபர் பால்குளம் பகுதியை சேர்ந்த சரவணன்(30) என்பது தெரியவந்தது. மேலும் மதுபோதையில் இருந்த சரவணன் பேருந்து மீது கற்களை வீசியுள்ளார். இதனை அடுத்து சரவணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |