மயிலாடுதுறை மாவட்டத்தில் மணல்மேடு பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் வரை செல்வதற்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளை பொதுமக்கள் நாடுகின்றனர். மேலும் இப் பகுதிகளில் அதிகமான பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதியில் உள்ளனர்.
குறிப்பாக பள்ளி மாணவர்கள் பேருந்து வசதி இல்லாததால் பேருந்தின் படிக்கட்டுகளிலும் பேருந்தின் பின்புறம் உள்ள ஏணிகளில் ஏறியபடியும் பயணம் செய்கின்றனர். இதனால் ஓட்டுநர்கள் பேருந்தை இயக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதனால் இந்த வழித்தடங்களில் பள்ளி நேரத்தில் மட்டுமாவது மாணவர்களுடைய நலனுக்காக கூடுதலாக பஸ் இயக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.