மேல்மருவத்தூர் அருகே அரசுப் பேருந்தில் ஆபத்தான முறையில் படியில் நின்றபடி பள்ளி மாணவர்கள் பயணம் செய்தபோது ஒரு மாணவன் தவறி விழுந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவத்தின் பதற வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. தவறி விழுந்த மாணவன் பேருந்து சக்கரத்தில் சிக்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுளள்து.
மாணவன் கீழே விழும்போது வாகனம் எதுவும் வராததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கை, கால் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டதாக மாணவனின் தாயார் தெரிவித்துள்ளார். மாணவர்கள் பேருந்தில் ஆபத்தான முறையில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்து இயங்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேல்மருவத்தூர் அருகில் அரசு பேருந்தில் தொங்கியவாறு பயணம் செய்த மாணவர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளனர். இதற்கு அரசே பொறுப்பு
தொங்கியவாறு ஏற்றி வந்த ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சரியாகாது
பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் @sivasankar1ss @CMOTamilnadu pic.twitter.com/TmNUmLhzUY
— Rajesh Krishnamoorthy 💛❤️ (@journalistraj7) August 30, 2022