Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பேருந்தில் ஏற்பட்ட பழக்கம்… இன்ஜினியருடன் மலர்ந்த காதல்… வசமாக மாட்டிக்கொண்ட பள்ளி மாணவி…!!!

மார்த்தாண்டம் அருகே பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தைகளை பேசி இன்ஜினியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்த்தாண்டம் அருகே உள்ள மருதம் பாறை பச்ச காவு பகுதியில் ஜான் பெனட் (22) என்பவர் வசித்து வருகிறார். அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் இன்ஜினியராக வேலை செய்து வந்துள்ளார். அவர் தினமும் வேலைக்கு செல்லும் பேருந்தில் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி சென்று வந்துள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவி தற்போது பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இன்ஜினியர் மாணவியை காதலிப்பதாகவும் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை பேசி காதலித்து வந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த மாணவியின் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உதவியாக மாணவியின் தாய் உடன் இருந்துள்ளார். அதனால் மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்த சமயத்தில், இன்ஜினியர் மாணவியிடம் ஆசை வார்த்தைகளை பேசி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதன்பிறகு அவர் தலைமறைவாகிவிட்டார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஜினியரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Categories

Tech |