Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பேருந்தில் ஏற முயற்சித்த வாலிபர்…. தலை நசுங்கி பலியான சோகம்…. திருச்சியில் கோர விபத்து…!!

பேருந்தின் சக்கரத்தில் சிக்கி வாலிபர் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்து ஜங்ஷன் ரயில்வே ரவுண்டானா அருகில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்தில் ஏறுவதற்காக ரயில் நிலையத்திலிருந்து வேகமாக ஓடி வந்த வாலிபர் பேருந்தின் பக்கவாட்டில் மோதி கீழே விழுந்துவிட்டார். அப்போது பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி, இறங்கியதால் அந்த வாலிபர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த வாலிபர் யார்? எந்த ஊரை `சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |