Categories
தேசிய செய்திகள்

பேருந்தில் சத்தமாக பாட்டு கேட்பதற்கு தடை…. உயர் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை….!!

தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் பேருந்துகளில் பயணம் செய்யும் போது கையில் ஸ்மார்ட் போனை  வைத்துக் கொண்டு பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் சத்தமாக பாட்டு மற்றும் வீடியோக்கள் பார்க்கின்றனர். இதனால் எரிச்சலடைந்த ஒருவர் பேருந்தில் பயணம் செய்யும்போது சத்தமாக பாட்டு கேட்பதற்கும் மற்றும் வீடியோ பார்ப்பதற்கும் தடை விதிக்க கோரி கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்ற நீதிபதிகள் பேருந்தில் பயணம் செய்யும் போது போனில் அதிக சத்தமாக வீடியோக்கள் பார்ப்பவர்களிடம் சக ஊழியர்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்று பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அறிவுறுத்த வேண்டும். இந்த அறிவுறுத்தலை மீறும் பயணிகளை பேருந்து ஊழியர்கள் வெளியேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்

Categories

Tech |