Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“பேருந்தில் சென்ற பெண்” காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

பேருந்தில் பெண்ணிடம் நகையை திருடி  சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம்  கிராமத்தில்  பெரியகருப்பன்-முத்தம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முத்தம்மாள் அரிமளம் கிராமத்தில்  இருந்து  புதுக்கோட்டைக்கு பேருந்தில் சென்றுள்ளார். இதனையடுத்து பேருந்தில் இருந்து இறங்கும் போது தனது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலி காணாமல் போனதை கண்டு முத்தம்மாள்  அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த முத்தம்மாள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |