Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பேருந்தில் சென்ற போது ஏற்பட்ட பழக்கம்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை….!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அய்னாபட்டி கிராமத்தில் விஷ்வா(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் கேட்டரிங் படித்துவிட்டு ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விஷ்வாவுக்கும், தனியார் கல்லூரியில் டி.பார்ம் படித்து வரும் ஜெயா என்ற பெண்ணுக்கும் பேருந்தில் சென்ற போது பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இவர்கள் கடந்த 4 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் நேற்று முன்தினம் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு முசிறி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதனை அடுத்து போலீசார் இரண்டு பேரின் பெற்றோர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஜெயாவின் பெற்றோர் திருமணத்தை ஏற்க மறுத்தனர். இதனால் போலீசார் விஷ்வாவின் பெற்றோருடன் புதுமண தம்பதியினரை அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |