Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பேருந்தில் சென்ற மாணவி…. கண்டக்டர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கண்டக்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் கிராமத்தில் வசிக்கும் மாணவி தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது பேருந்தின் கண்டக்டர் தியாகராஜன் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த தியாகராஜனை தீவிரமாக தேடி வந்துள்ளனர். நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் தியாகராஜனை அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |