Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்ற மூதாட்டி… மர்மநபர் செய்த செயல்… போலீசார் வலைவீச்சு…!!

பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் காட்டு பரமக்குடியில் உள்ள இந்திர குல வடக்கு தெருவில் ராமையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி புஷ்பவள்ளி முத்துவயல் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது பரமக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து முத்துவயல் கிராமத்திற்கு செல்ல பேருந்து ஏறியுள்ளார்.

இதனையடுத்து பேருந்தில் கூட்டமாக இருந்த நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்திகொண்ட மர்மநபர் புஷ்பவள்ளி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார். இந்நிலையில் சங்கிலியை இல்லாததை பார்த்த மூதாட்டி அதிர்ச்சியடைந்து உடனடியாக பரமக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |