பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் 7 பவுன் தங்க சங்கிலியை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமாநாதபுரம் மாவட்டம் வாணி கிராமத்தில் ஜெயலட்சுமி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமநாதபுரத்திற்கு சென்ற மூதாட்டி மீட்டும் அரசு பேருந்தில் ஏறி வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பேருந்தின் கூட்ட நெரிசலை பயன்படுத்திய மர்ம நபர் ஒருவர் ஜெயலட்சுமி அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார்.
இதனையடுத்து பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது சங்கிலி இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமி அதிர்ச்சியடைந்து ராமநாதபுரம் கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.