பேருந்தில் ஏறிய சிறுவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தை சேர்ந்த மனிஷ் ஜாதவ்(12) என்ற சிறுவன் அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் வழக்கம்போல் கடந்த 15-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மனிஷ் ஜாதவ் மதியம் வகுப்புகள் முடிந்து வீடு திரும்புவதற்காக பேருந்தில் ஏறியபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.