ஜம்மு காஷ்மீர் ஊதம்பூர் மாவட்டம் டொமைல் சவுக்கில் பெட்ரோல் பம்ப் அருகில் பயணிகள் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த பேருந்தின் உள்ளே கண்டக்டர் மற்றும் மற்றொரு நபர் இருந்தனர். அதன் பிறகு இரவு 10:30 மணிக்கு அந்த பேருந்தில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதன் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உதம்பூர் மாவட்டம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பஸ் கண்டக்டர் மற்றும் மற்றொரு நபருக்கு சிறிதாக காயம் அடைந்தது.அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேருந்தில் காயம் அடைந்த கண்டக்டர் கூறியது, இரவு 7 மணிக்கு, அடுத்த நாள் காலை ராம்நகருக்கு எடுத்துச் செல்வதற்காக பேருந்தின் கூரையில் ஒரு மெத்தை மற்றும் மற்ற இரண்டு பொருட்களை ஏற்றி செல்ல அனுமதி கூறி அடையாளம் தெரியாத இரண்டு நபர் தன்னை அணுகினர் மேலும் பொருட்களை ஏயற்றியவுடன், இருவரும் அந்த இடத்தை விட்டு சென்றனர். அதன் பிறகு 3 மணி நேரத்திற்கு இந்த குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டது. இதுகுறித்து உதம்பூர்-ரியாசி ரேஞ்ச் டிஐஜி சுலேமான் சவுத்ரி கூறியது, இரவு 10:30 மணிக்கு இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. விபத்தில் இருவர் காயமடைந்ததுடன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் செய்தமடைந்தது. குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.