பேருந்தில் பெண்களின் இருக்கையில் அமர்ந்த குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பி.எம்.டி.சி பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் பெண்களுக்காக தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்த ஆண்களுக்கு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அபராதம் விதித்துள்ளனர்.
இதனையடுத்து போக்குவரத்து கழக ஊழியர்கள் நடத்திய ஆய்வில் மொத்தம் 170 பேர் பெண்கள் இருக்கையில் அமர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த 170 ஆண்களிடமிருந்து ரூபாய் 17 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.