இளம்பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடமலாப்பூரில் அபிநயா என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் திலகர்திடல் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது மர்ம நபர் அபிநயாவின் கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து அபிநயா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.