அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை உணவகத்தில் நிறுத்த நிபந்தனைகள் வெளியிட்டுள்ளது. உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம், சுவை உள்ளதாக இருக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது. மேலும் சைவ உணவு மட்டும் தயார் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருக்கிறது.
கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும். பயோ கழிப்பறை இருக்க வேண்டும் மற்றும் உணவு வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி சிசிடிவி பொறுத்திருக்க வேண்டும் எனவும் கூறி இருக்கிறது. உணவகத்தில் உணவு விலை பட்டியல் அவசியம் எம்ஆர்பி விலையைவிட அதிகமாக விற்கக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.