தென்காசி மாவட்டத்தில் உள்ள வீரகேரளம்புதூர் சங்கரன்கோவில் தெருவில் ஆதிமூலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் காலண்டர் மற்றும் டைரி ஆர்டர் எடுத்து அச்சிட்டு கொடுத்து வந்துள்ளார். இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட வியாதிகளால் சிரமப்பட்ட ஆதிமூலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் நடைபெற்ற அன்று ஆதிமூலம் சங்கரன்கோவில்- சுரண்டை ரோட்டில் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஆதிமூலம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.