தமிழகத்தில் பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் அரசு வழங்குவது தேவையற்றது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய அவர், சிறப்பு முகாம்களை மூட வேண்டும். Q பிரிவு காவல் துறையை கலைக்க வேண்டும். சிறப்பு முகாம்களை அமைத்து முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். முதல்வர் இலங்கை தமிழர்களுக்கு அறிவித்த திட்டங்கள் காலதாமதமானது. இருந்தாலும் அதனை வரவேற்கிறோம்.
இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும். பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் என அரசு அறிவித்தது தேவையற்றது. 50 லட்சத்து 70ஆயிரம் கோடி கடன் என சொல்லும் அரசு எப்படிக் கடனானது என தெரிவிக்க வேண்டும். பேருந்துகளில் கட்டணம் குறைப்பு செய்யாமல் இலவசம் தேவையில்லை என்ற சீமான் கூறியுள்ளார். மேலும் மாணவர்களுக்கான நலத் திட்டத்தில் இருந்து முன்னை முதல்வர் படத்தை எடுக்க வேண்டாம் என்று ஸ்டாலின் கூறியது அரசியல் நாகரிகத்தை காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.