Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பேருந்தில் மனைவியிடம் சில்மிஷம் செய்த நபர்”…. தட்டிக் கேட்ட கணவர்…. வைரலான வீடியோ…. போலீசார் விசாரணை….!!!!!

மனைவியிடம் சில்மிஷம் செய்த நபரை கணவர் தட்டி கேட்டதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் இருந்து ஆவடிக்கு செல்லும் அரசு பேருந்தில் இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் பயணம் செய்த போது பின் இருக்கையில் இருந்த 50 வயது மதிப்பு தக்க ஆண் ஒருவர் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக சொல்லப்படுகின்றது. இதனால் அந்த பெண் தனது கணவரிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது மனைவியிடம் சில்மிஷம் செய்தவரை தட்டி கேட்டுள்ளார். ஆனால் அந்த நபர் “தான் ஆவடியில் போலீசாக இருப்பதாகவும் தூக்கம் கழகத்தில் கைப்பற்று விட்டதாகவும் பேசாமல் உட்கார்” என திமிராக பதில் கூறியுள்ளார்.

இதனால் இளம்பெண்ணின் கணவர் அந்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு அந்த நபர் கையைத் தூக்கி அடிக்க பாய்ந்தார். இதனால் அந்த இளம்பெண் கணவரை பேசாமல் இருக்கும்படி கூறியுள்ளார். கடைசியில் அந்த நபர் போலீஸான என்னையே கைநீட்டி பேசுறியா? என மீண்டும் மீண்டும் அடிக்கப் பாய்ந்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் டிரைவர் பேருந்தை சாலையோரமாக நிறுத்தினார்.

பின் கண்டக்டர் மற்றும் சக பயணிகள் இருவரையும் சமாதானம் செய்தார்கள். இந்நிகழ்வை சக பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவானது தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இந்த நிலையில் இச்சம்பவம் நடந்தது எப்பகுதி என போலீசர் விசாரணை கொண்டு வருகின்றார்கள். மேலும் அந்த நபர் உண்மையிலேயே போலீஸ் தானா அல்லது போதையில் இருந்தாரா எனவும் வீடியோவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை செய்து வருகின்றார்கள்.

Categories

Tech |