Categories
தேசிய செய்திகள்

பேருந்துகளில் இனி…. இதெல்லாம் செய்யக்கூடாது…. மாநில அரசு உத்தரவு…!!!!

கேரளாவில் அரசு போக்குவரத்து கழகம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

கேரள அரசு போக்குவரத்து கழகம், அனைத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு  புதிய  உத்தரவு ஒன்றை நேற்று பிறப்பித்துள்ளது. அதில் இனி கேரளாவில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது பயணிகள் யாரும் சத்தமாக செல்போன் பேசவும், பாட்டு கேட்கவும் அனுமதி கிடையாது. அவ்வாறு மீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால்  அது குறித்து தகவல் தெரிவிக்க வசதியாக இந்த அறிவிப்பினை அனைத்து பேருந்துகளில் தகவல் பலகையில் இடம்பெற செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற மத்திய அரசு சமீபத்தில் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் செல்போனில் சத்தமாக பேசுவது, பாடல்  கேட்பது போன்ற சக பயணிகளுக்கு தொந்தரவு செய்யும் செயல்களுக்கு தடைவிதித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |