தமிழக சட்டசபையில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று சட்டசபையில் காவல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த இரண்டு துறைகளும் தற்போது முதல்வர் முக ஸ்டாலின் வசம் உள்ளது. இன்று எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் முக ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். இதைதொடர்ந்து பல முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
அதன்படி பேருந்துகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று அறிவிப்பு வெளியானது, ஆனால் பெற்றோர்கள் விருப்பப்பட்டால் குழந்தைகளுக்கு கட்டணம் செலுத்தி இருக்கை பெற்றுக்கொள்ளலாம் எனவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 5 முதல் 12 வயது குழந்தைகளுக்கு அரை கட்டணம் வசூல் செய்யப்படும். அரசு பேருந்துகளில் குழந்தைகளுக்கு முன்பதிவு செய்யும் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அனைவரிடத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்பு மூன்று வயது உள்ள குழந்தைகளுக்கு அரை டிக்கெட் கட்டணம் எடுக்க வேண்டியிருந்தது குறிப்பிடதக்கது.