Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேருந்துகளை நிறுத்தி வைத்திருந்த டிரைவர்கள்…. கல்வீசிய நபர்…. போலீஸ் விசாரணை….!!

2 பேருந்துகள், ஏ.டி.எம். மையத்தின் மீது கல் வீசிய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உக்கிரன்கோட்டையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்தின் முன்பாக இந்த அரசு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த பேருந்துகளை டிரைவர்கள் அதிகாலையில் நெல்லை டவுனுக்கும், ஆலங்குளத்துக்கும் ஓட்டி சென்று வருவது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் உக்கிரன்கோட்டையில் 2 பேருந்துகளை டிரைவர் நிறுத்தி வைத்திருந்தனர்.

அப்போது நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் 2 பேருந்தின் பின்பக்க கண்ணாடி மீதும், ஏ.டி.எம். மீதும் கல்வீசி தாக்கி சேதப்படுத்தினர். இதுகுறித்து பேருந்து டிரைவர்களான சந்திரமோகன், மகேந்திரன், வங்கி மேலாளர் காந்திநாதன் ஆகியோர் மானூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |