பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள், மினி பேருந்துகளில் அதிக ஆட்கள் ஏறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் ஆட்டோ மற்றும் டாக்சிகள் விதிமுறைகளை பின்பற்ற கோரி ஜாகிர் உசேன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் ஆட்டோ, டாக்ஸியில் கட்டண மீட்டரை சட்டவிரோதமாக மாற்றியமைப்பது குற்றமாகும்.
ஆட்டோ, மினி பேருந்துகளில் அதிக ஆட்கள் ஏறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மதுரையில் கட்டண மீட்டர் முறையாக உள்ளதா? என்பதை உறுதி செய்த பிறகே சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். ஷேர் ஆட்டோக்கள், மினி பேருந்துகள் போலவும், மினி பேருந்துகள் பேருந்துகளை போலவும் இயக்க படுவதை தடுக்க வேண்டும். ஆட்டோக்கள் மற்றும் கார்களில் அதிக ஆட்கள் ஏறுவதை கடுமையாக தண்டிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக அரசு பதில் அளிக்க கோரி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.