திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்ட பயணிகளோடு தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது தனியார் பனியன் கம்பெனிக்கு சொந்தமாக உள்ள பேருந்துடன் நேருக்கு நேர் மோதிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பனியன் கம்பெனியை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் தனியார் பேருந்தில் பயணித்த பொதுமக்கள் என 27 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவருக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்த பேருந்து மோதும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.