ரஷ்யாவில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரஷ்யாவிலுள்ள நில்னி நோவ்கரோடு என்ற பகுதியில் உள்ள போல்ஜியோ ஒர்ளி என்ற கிராமத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் சில மக்கள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் பேருந்து நிறுத்தத்திலிருந்து என்று கொண்டிருந்தவர்கள் மீது திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார்.
அதன் பிறகு அந்த நபர் அருகே இருந்த வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டார். அந்தக் கொடூரத் தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களின் உடல்நிலை சீராக இருக்கிறது என மண்டல அவசரகால சேவை செய்து தொடர்பு அதிகாரி கூறியுள்ளார்.