விபத்தில் முதியவர் இருந்த வழக்கில் ஓட்டுநருக்கு ஓராண்டு ஜெயல் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழாத்தூரில் முத்துப்பிள்ளை(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு ஆலங்குடி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற தனியார் பேருந்து முதியவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் தனியார் பேருந்து ஓட்டுனரான ரவிக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும், ஓராண்டு ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.