இளம்பெண் மாநகர பேருந்து கண்டக்டரை தாக்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு கனிகாபுரம் பகுதியில் அனிதா(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் மயிலாப்பூரில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனிதா வியாசர்பாடி கணேசபுரம் பேருந்து நிறுத்தத்தில் பெரம்பூர் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் பாரிமுனையில் இருந்து பெரியார் நகர் நோக்கி சென்ற மாநகர பேருந்தில் அனிதா ஓடி சென்று ஏறியதால் பேருந்து கண்டக்டர் செல்வகுமார் அவரை கண்டித்தார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு அனிதா செல்வகுமாரை திட்டியபடியே பயணம் செய்துள்ளார்.
இதில் கோபமடைந்த செல்வகுமார் பெரம்பூர் பேருந்து நிறுத்தம் வந்தவுடன் கீழே இறங்குமாறு பெண்ணிடம் கூறியதால் மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அந்த பெண் செல்வகுமாரை கையால் தாக்கியுள்ளார். பதிலுக்கு செல்வகுமாரும் அனிதாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். பின்னர் இருவரும் மாறி மாறி தாக்கி கொண்டதை பார்த்த சக பயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இருவரிடமும் இருந்து புகாரை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.