கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ஊட்டிக்கு சுற்றுலா வந்து கொண்டிருந்தனர்.அப்போது பாலக்காடு மற்றும் வடகஞ்சேரி நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது வேகமாக மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அந்த கோர விபத்தில் ஐந்து பள்ளி மாணவர்கள் உட்பட ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு படையினர் உதவியுடன் 41 பேரை படுகாயத்துடன் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதில் நான்கு பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.