தென் அமெரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான டுமாகோவிற்கும் காலிக்கும் இடையே சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் படுகாயம் அடைந்த 15 பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த விபத்து பற்றி போக்குவரத்து அதிகாரிகள் பேசும் போது விபத்து நடைபெற்ற பகுதி பனிமூட்டமான மற்றும் வளைவுகள் உள்ள பகுதி என்ற காரணத்தினால் பேருந்தானது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்திருக்கும் அதனால் விபத்து ஏற்பட்டு இருக்கிறது என கூறியுள்ளார். மேலும் கவிழ்ந்த பேருந்தை நிமிர்த்தவும் பேருந்தில் சிக்கியவர்களை மீட்பதற்கும் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு 9 மணி நேரம் ஆனதாக கூறியுள்ளனர்.