Categories
மாநில செய்திகள்

பேருந்து சேவை….. சற்றுமுன் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு வருகின்ற 12, 13 ஆகிய தேதிகளில் பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. வெளியூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய மூன்று இடங்களில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை, வந்தவாசி, செஞ்சி, சேத்ப்பட்டு, போளூர் செல்லும் பேருந்துகள் தாம்பரத்தில் இருந்தும், வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், ஓசூர் மற்றும் செய்யாறு செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்தும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |