Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பேருந்து நிறுத்தத்தில் கட்டி புரண்டு சண்டையிட்ட இருவர்…. அலறியடித்து ஓடிய பெண்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

மது போதையில் 2 பேர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடந்தூர் பேருந்து நிறுத்தத்திற்கு குடிபோதையில் வந்த 2 பேருக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அதில் ஒருவர் வலி தாங்க முடியாமல் பயணிகளின் கூட்டத்திற்கு நடுவில் புகுந்து தப்பி ஓட முயற்சி செய்ததால் பேருந்துக்காக காத்திருந்த பெண்கள் அலறியடுத்து கொண்டு ஓடினர்.

சுமார் 20 நிமிடம் இரண்டு பேரும் பேருந்து நிறுத்தத்தில் நின்ற சண்டை போட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சண்டை போட்டுக் கொண்டிருந்த இரண்டு பேரையும் விலக்கி அவர்களை எச்சரித்தனர். வேடசந்தூர் பேருந்து நிறுத்தத்தில் அடிக்கடி இந்த சம்பவங்கள் நடப்பதால் புறகாவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |