Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்த தொழிலாளி…. சட்டென நேர்ந்த விபரீதம்…. பரபரப்பு….!!!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி மஞ்சனக்கொரை பகுதியில் கூலித் தொழிலாளி ஹரி (35) வசித்து வந்தார். இவர் ஊட்டி லோயர் பஜார் சாலை உள்ள பேருந்து நிலையத்தில பேருந்தில் ஏற காத்திருந்தார். அப்போது கார்த்திக் என்பவரும்  ஹரியுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பேருந்து நிலையத்தில் அமர்ந்து இருந்த  ஹரியை, தான் மறைத்து வத்திருந்த கத்தியால் காரத்திக் குத்தினார். இதனை பார்த்த சகபயணிகள் பயத்தில் அடித்து பிடித்து ஓடினர்.

அதன்பின் ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஹரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இது குறித்து  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தொழிலாளியை கத்தியால் குத்திய கார்த்திக் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

Categories

Tech |