Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த நபரிடம் செல்போன் திருட்டு”… வாலிபர் கைது…!!!

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்தவரிடமிருந்து செல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவர் வடபழனியில் இருக்கும் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றார். இவர் திருவண்ணாமலைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பஸ் நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த போது அவரின் பாக்கெட்டில் இருந்து ஒருவன் செல்போன் திருடுவதை உணர்ந்து கூச்சலிட்டு இருக்கின்றார்.

சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து திருடனை மடக்கிப் பிடித்து சரமாரியாகத் தாக்கி கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். போலீசாரின் விசாரணையில் திருடிய நபர் கூடுவாஞ்சேரியை சேர்ந்த 30 வயதுடைய ராஜா என்பது தெரிய வந்திருக்கின்றது. போலீசார் ராஜாவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.

Categories

Tech |